இலங்கையில் மகளிர் அமைப்புகளை இனங்காண நடவடிக்கை!
இலங்கையில் தமிழ் மொழி மூலமாக இயங்கி வரும் மகளிர் அமைப்புகளை இனங்கண்டு அவற்றோடு தொடர்புகளை வலுப்படுத்தி தேசிய ரீதியிலான செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்குப் புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி நடவடிக்கை எடுக்கவுள்ளது என அதன் தலைவி ரஞ்சனிசுரேஷ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
நாட்டில் தமிழ்பேசும் சமூகங்கள் வாழும் பகுதிகளில் இயங்கி வரும் மகளிர் அமைப்புகளை நாம் அறிந்துகொள்ள விரும்புகின்றோம்.
இவ்வாறு இயங்கி வரும் அமைப்புக்கள் தமக்குள் தொடர்பாடல்களை வலுப்படுத்துவதன் மூலம் தேசிய ரீதியிலான கட்டமைப்பை ஏற்படுத்திக்கொள்வதுடன் ஒருங்கிணைந்த செயற்பணிகளை முன்னெடுக்கலாம் என நம்புகின்றோம்.
எனவே, இவ்வாறு இயங்கும் அமைப்புக்கள் எம்மைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல் தர புதிய அலை கலை வட்ட மகளிர் அணி இலக்கம் 53, சங்கமித்த மாவத்தை, கொழும்பு -13 என்ற முகவரிக்குக் கடிதம் மூலமாகவும் 0754880172 என்ற வட்சப் இலக்கத்திலும் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.





கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam
