அமெரிக்காவை உலுக்கிய கொலைகள்! விலகாத மர்மத்துடன் முடிந்த வழக்கு
அமெரிக்காவில் கடந்த 2022ஆம் ஆண்டு, நான்கு இடாஹோ பல்கலைக்கழக மாணவர்களை வீடு புகுந்து குத்திக் கொன்ற பிரையன் கோஹ்பெர்கருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நான்கு மாணவர்களும் ஆகியோர் இடாஹோவின் மொஸ்கோ நகரில் உள்ள வளாகத்திற்கு வெளியே உள்ள வீட்டில் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், அவர்களை கொன்ற குற்றவாளியான கோஹ்பெர்கருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி, குற்றவாளி புத்தியில்லாமல் செயற்பட்டதாக கூறினார்.
மரண தண்டனை
எவ்வாறாயினும், கொலைக்கான நோக்கத்தை கூறாத கோஹ்பெர்கர், நீதிமன்றத்தில் பேச மறுத்துவிட்டார்.
ஆனால் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் மூலம் மரண தண்டனையை தவிர்த்தார்.
குற்றவாளியான பிரையன் கோஹ்பெர்கர் குற்றவியல் முனைவர் பட்ட மாணவர் ஆவார்.
ஒரு முனைவர் பட்ட மாணவர் ஏன் இன்னொரு பல்கலைக்கழக வளாகத்திற்கு சென்று அங்கிருந்த மாணவர்களை கொலை செய்ய வேண்டும் என்பது தற்போதும் மர்மமாகவே இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



