அமெரிக்காவை புரட்டிப்போட்ட ஐடா புயல்! அவசரகால நிலை பிரகடனம்
ஐடா புயல் தாக்கத்தினால் அமெரிக்காவின் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் நியூயார்க் நகரில் அவசர காலநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
நியுயோர்க்கில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு கனமழை பெய்து வருவதனால் ரெயில்வே சுரங்கப் பாதைகள், வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்துள்ளது.
இதனை மோசமான காலநிலையாக நியுயோர்க் அறிவித்திருக்கிறது. இதன் காரணமாக ப்ளாசியோ நகரில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நியுயோர்க்கில் சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளதுடன் விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே ஐடா புயல் தாக்கிய லூசியானா, நியுஏர்லியன்ஸ் பிராந்தியங்களில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளின் மின்னிணைப்புத் துண்டிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நியூயார்க் மத்திய பூங்காவில் மட்டும் ஒரு மணி நேரத்தில் 8 சென்டிமீட்டர் மழை பெய்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.