பொலிஸாரின் பிடியில் இருந்து போதைப் பொருள் வர்த்தகர் தப்பியோட்டம்
ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரொருவர் பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிச் சென்றுள்ள சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
அவிசாவளை வீதி, ஒருகொடவத்தைப் பகுதியில் வசிக்கும் 47வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
ஐஸ் போதைப் பொருளை தம் வசம் வைத்திருந்த நிலையில் கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர் மற்றும் இன்னும் சிலர் ஒரு பொலிஸ் சார்ஜண்ட் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோரின் பாதுகாப்பில் மாளிகாகந்தை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இடைவழியில் மேற்குறித்த சந்தேக நபர் பொலிஸ் உத்தியோகத்தர்களை லாவகமாக ஏமாற்றி விட்டுத் தப்பிச் சென்றுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri