ஐசிசியின் மகளிர் கிரிக்கட் 2024: வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ பிரசாரத் திரைப்படம்
ஐசிசி 2024 சர்வதேச கிரிக்கட் சம்மேளன மகளிர் 20க்கு20 உலகக் கிண்ணத்தின் 9ஆவது தொடர் ஆரம்பமாக இன்னும் 19 நாட்கள் உள்ளன.
இந்தநிலையில், சர்வதேச கிரிக்கட் சம்மேளனம், அதிகாரப்பூர்வ பிரசாரத் திரைப்படத்தை வெளியிட்டுள்ளது.
இந்த சிறப்பு நிகழ்வின் தொடக்கத்தைக் கொண்டாடும் வகையில், இந்திய அணியின் தலைவி, ஹர்மன்ப்ரீத் கவுர், அணியின் சக வீராங்கனை ஷஃபாலி வர்மா மற்றும் இலங்கை அணியின் தலைவி, சாமரி அதபத்து போன்ற முன்னணி வீராங்கனைகள் நடித்த 'எதை எடுத்தாலும்'(Whatever it takes) என்ற தொடர் பிரசாரத் திரைப்படங்களை ஐசிசி அறிமுகப்படுத்தியது.
20க்கு20 உலகக் கிண்ணம்
இந்த திரைப்படம், மகளிர் விளையாட்டின் கொண்டாட்டம் மற்றும் பெரிய வெற்றிகள் மற்றும் பாரிய சவால்களை முறியடிக்கும் அவர்களின் ஊக்கமளிக்கும் பயணங்களைக் காட்டுகிறது.
ஒக்டோபர் 3 முதல் 20 வரை நடைபெறும் போட்டியைச் சுற்றியுள்ள விடயங்களையும் இந்த திரைப்படம் வெளிப்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், ஐசிசி மகளிர் 20க்கு20 உலகக் கிண்ண 2024 போட்டிகள்,ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் மற்றும் சார்ஜா ஆகிய இரண்டு இடங்களில் 18 நாட்களுக்கு இடம்பெறவுள்ளன.
இதன்போது பத்து அணிகள் தலா ஐந்து பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் விளையாடும்.
அரையிறுதிப் போட்டிகள் அக்டோபர் 17 துபாயிலும் மற்றும் அக்டோபர் 18 சார்ஜாவிலும் இடம்பெறவுள்ளன.
இறுதிப் போட்டி அக்டோபர் 20 ஆம் திகதி துபாயில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |