இப்ராஹிம் ரைசி ஒரு தைரியமான மனிதர்: இஸ்புல்லா அமைப்பு பெருமிதம்
ஈரான் மக்களுக்கு சேவை செய்வதற்கும், நாட்டின் மீது விதிக்கப்பட்ட கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்ப்பதற்கும் அயராது உழைத்த இப்ராஹிம் ரைசியை(Ebrahim Raisi) "தைரியமான மனிதர்" என்று இஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா(Hasán Nasrala) கூறியுள்ளார்.
ஈரானின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் ரைசியின் குறிப்பிடத்தக்க சாதனைகளை நினைவு கூறுவதாகவும் அவர் எடுத்துரைத்தார்.
“ரைசியின் நிர்வாகம் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்தது, எண்ணெய் உற்பத்தியை அதிகரித்தது. தெஹ்ரானின் தடுக்கப்பட்ட சொத்துக்களை வெற்றிகரமாக மீட்டெடுத்தது.
சர்வதேச அமைப்பு
ரைசியின் தலைமையின் கீழ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மற்றும் BRICS போன்ற முக்கிய சர்வதேச அமைப்புகளுடன் ஈரான் இணைந்தது.

மறைந்த ஜனாதிபதி ரைசி மற்றும் அவரது சகாகக்களின் தியாகம் குறித்து தனது இரங்கலைத் தெரிவிக்கின்றேன்.
விசுவாசமான மற்றும் மரியாதைக்குரிய ஈரானிய அதிகாரிகளின் தியாகம் ஆழ்ந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது.
ரைசியின் தியாகம் எதிர்ப்பு முன்னணிக்கு ஒரு பெரிய இழப்பு. மறைந்த ஜனாதிபதி ரைசி எதிர்கால சந்ததியினருக்கு ஒரு முன்மாதிரியான நபராக பணியாற்ற முடியும் என்று வலியுறுத்தி, தியாகிகளை முன்மாதிரியாக பார்க்குமாறு இளைஞர்களை நஸ்ரல்லா வலியுறுத்தினார்.
இஸ்லாமியப் புரட்சி
இஸ்லாமியப் புரட்சியின் வெற்றியிலிருந்து ஈரானுக்கான ஜனாதிபதி ரைசியின் அர்ப்பணிப்பு மற்றும் சேவை பாராட்டத்தக்கது.

இஸ்லாமியப் புரட்சியின் தலைவரான அயதுல்லா கமேனிக்கு ஜனாதிபதி ரைசியின் விசுவாசத்தை பாராட்டுகின்றேனன்.
தலைவருக்கு சேவை செய்யும் அர்ப்பணிப்புள்ள சிப்பாயாக தன்னைக் ரைசி கருதினார்” என நஸ்ரல்லா சுட்டிக்காட்டியள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சிங்கப்பெண்ணே சீரியலில் மாற்றப்பட்ட நடிகை.. புதிதாக வந்துள்ள நடிகை யார் தெரியுமா? வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
புதன் - சனி சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: நாளை முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது! Manithan
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan