இப்ராஹீம் எமது கட்சியின் உறுப்பினர் அல்ல - மக்கள் விடுதலை முன்னணி
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு தற்கொலை குண்டுதாரியின் தந்தையான முஹம்மது இப்ராஹிம் என்பவர் மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் உறுப்பினர் அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் ஒன்றில் முகமது இப்ராஹிம் என்பவர் எமது கட்சியின் தேசிய பட்டியல் வேட்பாளராக பெயரிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அவர் கட்சியின் உறுப்புரிமை பெற்றுக்கொண்ட ஒருவர் அல்ல என தெரிவித்துள்ளார்.
அண்மையில் மித்தெனிய பிரதேசத்தில் போதைப்பொருள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினரை அந்தக் கட்சியானது கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கி இருந்தது.
எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய தற்கொலை குண்டு தாரிகளின் தந்தையான முகமது இப்ராஹிம் என்பவரை மக்கள் விடுதலை முன்னணி ஏன் பணி நீக்கவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விக்கு பதில் அளித்த போது அவர் கட்சியின் உறுப்புரிமை பெற்றுக் கொண்டவர் அல்ல என நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முகமது இப்ராஹிம் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் வேட்பாளராக பேரிடப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

தென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த 15 திரைப்படங்கள்.. அதில் தமிழ் படங்கள் எத்தனை தெரியுமா? லிஸ்ட் இதோ Cineulagam
