முல்லைத்தீவில் ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலத்தால் நிவாரணப் பொதிகள் வழங்கி வைப்பு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு- அம்பலவன் பொக்கணை, மாத்தளன் மக்களுக்கு இன்றையதினம்(1) ஐபிசி தமிழின் உறவுப்பாலம் திட்டத்தின் ஊடாக நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில், கரைத்துறைப்பற்று, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் கலந்து கொண்டு மக்களுக்கான நிவாரணப்பொதிகளை வழங்கி வைத்தார்.
அத்தோடு, கிராமசேவகர் மற்றும் பிரதேச செயலாளர் களத்தில் இணைந்து இரவு வரை பணியாற்றியுள்ளனர்.
நிவாரணப்பணிகள்
அதுமட்டுமன்றி, தமிழர் தாயகத்தில் பாதிக்கப்பட்ட ஏனைய இடங்களுக்கு அடுத்த கட்ட நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட உள்ளன.

மேலும், தமிழர் தாயகம் உட்பட நாடளாவிய ரீதியில் பெரும் வெள்ள அனர்த்தம் நிவாரணப்பணிகளில் ஐ.பி.சி தமிழ் உறவுப்பாலத்துடன் கரங்கோர்க்க விரும்புவோர் இணைந்து கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 4 மணி நேரம் முன்
பிரிட்டிஷ் ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: பின்னணியில் ரஷ்யாவின் சதியா? பிரித்தானியா சந்தேகம் News Lankasri
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam