தமிழர் பாரம்பரியத்தை உலகறியச் செய்யும் அடுத்த நகர்வு
தமிழர்களின் பல்லாயிரக்கணக்கான வாழ்வியல் வரலாற்றில் அன்று தொட்டு இன்று வரை கூடவே பயணிக்கும் ஒன்றாக சமய வழிபாடுகளும், பண்பாடுகளும் இருக்கின்றன.
காலத்திற்கு காலம், வாழும் சூழலும் சமூகமும், வாழும் தேசமும் மாறிப் போனாலும் கூட தமிழர்களோடு இணைந்தே பயணிக்கின்றது தமிழ் பாரம்பரியமும் கலாசாரமும்.
குறிப்பாக சமய வழிபாடுகளும், நடைமுறைகளும் ஏனைய மொழி பேசுபவர்களை விட தனித்துவமானதும், மேற்கத்திய நாடுகளே வியந்து பார்க்கும் வகையிலும் அமைந்திருக்கின்றமை தமிழர்களுக்கே உரிய தனிப் பெருமை என்றே சொல்லலாம்.
கால ஓட்டத்தில், யுத்தம், வேலை, கல்வி என்று தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்து வேறு தேசங்களுக்குச் சென்றவர்கள் அவரவர் தேசங்களில் தமது சமய வழிபாடுகளையும் கலாசாரங்களையும் கொண்டு சென்றாலும் கூட தாயகத்தில் இருந்து வழிபடும் நேரடியான உணர்வினை இழக்க நேரிடுகின்றது.
இப்படியான ஒரு சூழலில் தான் தமிழரின் வழிபாடுகளையும், சமய கலாசார நிகழ்வுகளையும், ஜோதிடம், வாஸ்து போன்றவற்றையும் தனித்துவமாக உங்கள் கை சேர்ப்பதற்காக புதிதாக ஐபிசி பக்தி இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தாயக மண்ணில் வாழும் வரம் பெற்ற தமிழர்களுக்கும், ஈழத்தில் வாழ்ந்த அந்த கனவுகளை அசைபோட்டுக் கொண்டு புலத்தில் வாழும் தமிழர்களுக்கும் சொந்த மண்ணின் பெருமையையும், தமிழர் உணர்வினையும் நேரடியாக உங்கள் இல்லம் கொண்டு வந்து சேர்க்கின்றது ஐபிசி பக்தி.
ஐபிசி பக்தி இணையத்தளத்தைப் பார்வையிட இந்த Link ஐ க்ளிக் செய்யவும்.. |