அனைத்து இன மக்களையும் சமமாக நடத்துவேன் : அக்கறைப்பற்றில் ஜனாதிபதி
அடுத்த மாதம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நாட்டிலுள்ள அனைத்து இன மக்களையும் சமமாக நடத்துவேன் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
எனவே ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் போது தேசத்தைப் பற்றி சிந்திக்குமாறு, கிழக்கின் அக்கரைப்பற்று நகர மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும்போது, என்னைப் பற்றி சிந்திக்காமல், எதிர்காலத்தைப் பற்றி சிந்தியுங்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உத்தரவாத சட்டம்
அக்கரைப்பற்றில் இடம்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். தலைமையிலான தேசிய காங்கிரஸின் 20வது மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி இந்த கருத்துக்களை கூறியுள்ளார்.
“நான் சிங்களவர், முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களை ஒரே மாதிரியாக நடத்துவேன். தொற்றுநோய் பரவிய காலத்தில் பலவந்தமாக அடக்கம் செய்யப்பட்டதன் மூலம் இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.
அதனை எனது அரசாங்கம் செய்யவில்லை. அதை இன்னொரு அரசாங்கமே செய்தது. எனினும் அதற்காக மன்னிப்பை கோரினேன். வலுக்கட்டாயமாக அடக்கம் செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு இழப்பீடு வழங்கவும் தயாராக உள்ளோம்”
இந்தநிலையில்,ஒருவரின் கடைசி உரிமைகள் எவ்வாறு நிறைவேற்றப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உத்தரவாத சட்டத்தை கொண்டு வருமாறு அமைச்சர் அலி சப்ரியிடம் நான் கோரிக்கை விடுத்துள்ளேன்” என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




