இணைந்த வடகிழக்கில் முதலமைச்சராக போட்டியிடுவேன்! சாணக்கியனின் எதிர்பார்ப்பு

batticaloa election eastern province northern province shanakkiyan
By Kumar Apr 28, 2021 12:36 PM GMT
Report

இணைந்த வடகிழக்கு மாகாணசபை தேர்தல் நடைபெறுமானால் அதில் தான் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவேன் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,


சமகால அரசியலிலே மிக முக்கியமான பிரச்சினையாக தமிழ் அரசியல்வாதிகளின் மத்தியிலும், முஸ்லிம் அரசியவாதிகளின் மத்தியில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் குறைக்கப்பட்ட விடயம் இப்போதும் பேசும்பொருளாகவும், மிகவும் சூடாகவும் பேசப்பட்டிருந்தமையை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

கடந்த வாரம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகமாக தரம் குறைத்து பெயர் மாற்றி சமல் ராஜபக்ஷவின் அமைச்சின் ஊடாக கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டமையை நாங்கள் அறியக்கூடியதாக இருந்தது.

இந்தவிடயமாக கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவிடம் எங்களுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக தெரியப்படுத்தி அதனை கதைத்து கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு நிரந்தரமாக ஒரு கணக்காளரை நியமித்திருந்தோம்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குரிய கணக்காளர் நியமனம் சம்பந்தமான பிரச்சனை 1993ஆம் ஆண்டு முதல் கணக்காளர் வெற்றிடமாக காணப்பட்டது.

குறித்த பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் நியமிக்கப்படாமையை முதன் முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிமலநாதன் தலைமையில் ஒத்திவைக்கும் பிரேரணையில் நாடாளுமன்றத்தில் கதைத்திருந்தோம்.

இதனை அம்பாறை மாவட்டத்தில் உள்ள சில சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களும், சில முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என்பதை மனதளவில் ஏற்றுக்கொண்டார்கள்.

ஆனால் துரதிஸ்டவசமாக கணக்காளர் கடமையை பொறுப்பேற்பதற்கு முன்னர் சிலரின் சதித்திட்டத்தினால் தடுக்கப்பட்டு கணக்காளர் கடமையை பொறுப்பேற்கவில்லை என்பது கல்முனை மக்களுக்கு மட்டுமன்றி ஒன்றுபட்ட தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் கவலையை தந்திருந்தது.

அத்துடன் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியும் மாறிப்போய் புதிய அரசாங்கத்தின் ஆட்சியும் வந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்திவைக்கும் பிரேரணையில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒரு தமிழ் அரசியல்வாதிதான் அதை நிறைவேற்றக்கூடாது என்றும், செய்யக்கூடாது என்றும், காலப்போக்கில் நாங்கள் அதனை செய்வோம் எனக்கூறப்பட்டது.

இதனால் இப்போது அரசுடன் இணைந்திருக்கும் ஆளும்தரப்பு அரசியல்வாதிகளுக்கு பாதகமான சூழ்நிலை உருவாகலாம் என்பதற்கு இணங்க அன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றேன்.

நாங்கள் நல்லாட்சி அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்துள்ளோம் என்றும், கிழக்கிலே தமிழர், முஸ்லிம்கள் ஒற்றுமைப்படக்கூடாது என்பதற்காகவும், கிழக்கில் தமிழர்களின் இருப்பு பறிமுதல் செய்யப்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் காரணம் என பேசியவர்கள் இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் குறைக்கப்பட்டதற்கு அப்பிரச்சனை சம்பந்தமாக பேசாமல் இருப்பது கவலையளிக்கின்றது.

இவ்வாறான அரசியல்வாதிகளை கல்முனை மக்களும், அம்பாறை மாவட்ட மக்களும் இனியும் நம்பி ஏமாறக்கூடாது என்பதை தெரியப்படுத்துகின்றேன். ஆனால் இன்று நாட்டிலே பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பிரச்சனைகள் உட்பட பல பிரச்சனைகளில் தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாகவும்,சமாதானமாகவும் செயற்படுகின்றார்கள்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களும், முஸ்லிம்மக்களும் ஒற்றுமையாக செயற்படுவதை அவதானித்த ஒருசில தமிழ் அரசியல்வாதிகளும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் இணைந்து தங்களின் குறுகியகால அரசியலுக்காகவும், தங்களின் அரசியல் வியாபாரத்திற்காகவும், அரசியல் இருப்பு வீழ்ச்சி காணும் என்பதற்காவும் எடுத்த நடவடிக்கைதான் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம்குறைத்து அனுப்பப்பட்ட கடிதமாகும்.

இவ்விடயமாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு கதைத்துள்ளேன்.

மாகாணசபை தேர்தல் நடப்பதற்கான எந்த அறிவிப்பும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.   அதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

வடகிழக்கு இணைக்கப்பட்டு மாகாணசபை தேர்தல் நடைபெறுமானால் அதில் நான் போட்டியிடுவேன் என்றார். 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US