உயிருடன் இருக்கும் வரை அரசியல் செய்வேன்
தாம் உயிருடன் இருக்கும் வரையில் அரசியலுக்கு விடை கொடுக்கப் போவதில்லை என மஹஜன எக்சத் பெரமுன கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தமது மூச்சுக்காற்று இருக்கும் வரையில் அரசியலுக்கு விடை கொடுக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
உலகின் எல்லா இடங்களிலும் வாழ்நாள் அரசியல் என்பது ஒரு வழமையான மரபு என அவர் தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர்கள் அடுத்த திட்டங்களை வகுப்பார்கள் எனவும் அதுவரை யாரும் பதற்றம் அடைய தேவை இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் செல்லும் பாதை பிழையானது எனவும் இதனால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர் எனவும் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.



