இலங்கையில் கடுமையான சீர்திருத்தங்கள் அவசியம்! ஹர்ஷ டி சில்வா
தாம் அமைச்சுப் பதவியை ஏற்கத் தயார் என சில ஊடகங்களில் வெளியான தகவல் பொய்யானது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் உள்ள எந்தவொரு கட்சியுடனும் அமைச்சுப் பதவிக்காகவோ அல்லது வேறு எந்தப் பதவிக்காகவோ தாம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான சீர்திருத்தங்கள் அவசியம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேறியுள்ள நிலையில் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள அனைத்துக் கட்சி அரசாங்கம் தேவை எனவும் அவர் அறிவித்துள்ளார்.
இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க கடுமையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
அதற்காக கட்சித் தலைவர்கள் சுமார் 9-12 மாதங்களுக்கு தங்கள் அரசியல் சித்தாந்தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு பொதுவான நிகழ்ச்சி நிரலுக்காக உழைக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam