எரிபொருள் விலை உயர்த்தப்பட்டால் முன்கூட்டியே அறிவிப்பேன்! - அமைச்சர் அறிவிப்பு
எரிபொருட்களுக்கான விலைகள் உயர்த்தப்பட்டால் முன்கூட்டியே அது குறித்து அறிவிப்பேன் என எரிசக்தி வள அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவுடன் எரிபொருள் விலை அதிகரிப்பதாக வெளியான தகவல் பிழையானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலை உயர்த்தப்படுவதாக வெளியான வதந்தியைத் தொடர்ந்து பெரும் எண்ணிக்கையிலானவர்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று 92 ஒக்டேன் ரக பெற்றோலுக்கு தட்டுப்பாடு நிலவியது.
லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இந்த வகை பெற்றோல் விற்பனை செய்யப்பட்டது.
லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் ஒரு லீற்றர் 92 ஒக்டேய்ன் ரக பெற்றோலின் விலை 5 ரூபாவினால் உயர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 16 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
