ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கப்போகும் அடுத்த வாரிசு! முன்னாள் ஜனாதிபதியின் மகன் அதிரடி அறிவிப்பு
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக தான் போட்டியிட போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன (Daham Srisena)தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தஹாம் சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்நறுவை மாவட்ட இளைஞர் அதிகார சபையின் தலைவராக தற்போது பதவி வகித்து வருகிறார்.
தஹாம் சிறிசேனவை தேசிய அரசியல் நீரோட்டத்திற்குள் கொண்டு வரும் நோக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் ரீதியான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதியின் புதல்வி சத்துரிகா சிறிசேனவும் கடந்த காலங்களில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam