ரஞ்சன் ராமநாயக்கவிற்காக நாடாளுமன்ற ஆசனத்தை தியாகம் செய்ய தயாராகிவரும் உறுப்பினர்
புதிய வருடத்தில் விடுதலையாகி உயர் கல்வியை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறைச்சாலைக்கு நத்தார் விஜயத்தை மேற்கொண்ட போது நாடாளுமன்ற உறுப்பினரான ஹரின் பெர்னாண்டோவிடம் இதனை தெரிவித்துள்ளதாக குறிப்பட்டுள்ளார்.
“2022 இல் தான் விடுதலையாகி உயர் படிப்பில் ஈடுபடுவேன் என்றும்,விடுவிக்கப்பட்டால் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வேன்” எனவும் ரஞ்சன் ராமநாயக்க தன்னிடம் தெரிவித்ததாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,ரஞ்சன் ராமநாயக்கவிற்காக எனது நாடாளுமன்ற ஆசனத்தை வேண்டுமென்றால் தியாகம் செய்வதில் நான் மகிழ்ச்சியடைவேன் என அவரிடம் கூறினேன். அவர் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri