“பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது நெல்லிக்காய் விற்றேன்” - கந்தையா பாஸ்கரன் (VIDEO)
வாழ்க்கையில் சம்பாதித்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வத்தில் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே நெல்லிக்காய் விற்று தனது ஆர்வத்தை மென்மேலும் உயர்த்திக்கொண்டுள்ளதாக ஐபிசி தமிழ்,லங்காசிறி ஊடக வலையமைப்பின் நிறுவனர் பாஸ்கரன் கந்தையா தெரிவித்துள்ளார்.
தொழில்துறையில் முன்னேற வேண்டும் என்ற ஆர்வத்தில் சிறு வயதிலிருந்தே தம்மை முழுமையாக ஈடுப்படுத்தியமையே தற்போது தனது வெற்றிக்கான காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் பிரமுகர்களின் அறியப்படாத பக்கங்களை தேடும் நக்கீரன் சபை விசேட நிகழ்ச்சியில் அதிதியாக கலந்துக்கொண்டு தனது வாழ்வில் கடந்து வந்த பாதைகளையும்,எதிர்நோக்கிய சிக்கல்களையும் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.
தற்போது காணப்படும் எந்தவொரு அரசியல் தலைவர்களும் இனம் சார்ந்து,மண் சார்ந்து அல்லது தேசியம் சார்ந்து ஒரு குறிக்கோளுடன் செயற்படும் அரசியல் தலைவர்கள் அல்ல என்றும்,தூய்மையான அரசியல் கட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டு மண்ணிற்கு ஏற்பட்ட வடுக்களையும்,மக்களுக்கு ஏற்பட்டுள்ள வலிகளையும் மாற்றக்கூடியதாக அமைய வேண்டுமென்றும்,அவ்வாறானதொரு அரசியலை உருவாக்க வேண்டுமெனில் தன்னால் முடிந்தவரை அதற்காக உழைக்க தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான காணொளியின் முழு வடிவம் உங்கள் பார்வைக்காக,
பாகம் ஒன்று