பதவியை துறந்ததன் காரணம் என்ன? லொஹான் ரத்வத்தே வெளியிட்ட தகவல்
அரசாங்கத்தை சங்கடப்படுத்த விரும்பாததன் காரணமாகவே தானாக முன்வந்து பதவியை இராஜினாமா செய்ததாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
சிறைச்சாலை அமைச்சு ஒப்படைக்கப்பட்டபோது, அது ஒரு பாரிய நெருப்புக் குவியலாக இருந்தது, குறுகிய காலத்தில் தீயை அணைத்து சிறையை ஒரு நிலையான இடத்திற்கு கொண்டு வர முடிந்தது.
இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்னைப் பற்றி வெளியான சில ஊடக அறிக்கைகளால் அரசுக்கு சங்கடமாக இருக்கும் என்று கருதியதால் நானாக முன்வந்து சிறைத்துறை இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தேன்.
எனினும், தொடர்ந்து மாணிக்கம் மற்றும் ரத்தினத் தொழில்துறை இராஜாங்க அமைச்சர் பதவியை வகிப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri