ஐ.பி.எல் 2025 தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்த அணி!
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது வெற்றியை பதிவு செய்துள்ளது.
நடப்பு ஐ.பி. எல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்குளூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலாவது போட்டி
இந்த முதலாவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
முதல் வெற்றி
துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் அஜின்கியா ரஹானே 56 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
இந்தநிலையில்175 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

துடுப்பாட்டத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சார்பில் விராட் கோலி 59 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.
மேலும் இம்முறை ஐ.பி. எல் 2025 தொடர்கள் புதிய விதிகளுடன் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri