ஆட்சியைப்பிடிக்கும் அடுத்த ராஜபக்ஸ யார் என்பது எனக்கு தெரியும் - ரோஹித ராஜபக்ஸ தெரிவிப்பு
நாட்டில் ஆட்சியைப்பிடிக்கும் அடுத்த ராஜபக்ஸ யார் என்பது எனக்கு தெரியும். எனினும் அதை இப்போது கூற முடியாது என பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மஹிந்த ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவருடன் இருந்தவர்கள் அவருக்கு மூளைச்சலவை செய்தே பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாகவே தேர்தலை நடத்த வைத்தனர்.
ஜனாதிபதி தேர்தலில் எனது தந்தை தோல்வியடைந்த நிலையில் ஒரு மணி நேரத்திற்குள் ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேற வேண்டும் என்று எமக்கு செய்தி கிடைத்தது. வாகனத்தில் வந்து இறங்கிய ஒரு குழுவினர் எம்மை வெளியேறக் கூறினர்.
அந்த ஒரு மணி நேரத்திற்குள் எமக்கு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam