ஜனாதிபதி ரணில் எனக்கு இடையூறு செய்ய மாட்டார்! பிரதமர் தினேஷின் நம்பிக்கை
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பணிகளுக்கு இடையூறு செய்யமாட்டார் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டின் 27வது பிரதமராக தெரிவு செய்யப்பட்ட பிரதமர் தினேஷ் குணவர்தன தனது கிராமத்திற்கு சென்று, அங்கு தனது தந்தை மறைந்த பிலிப் குணவர்தனவின் நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
நாட்டுக்கு விரைவான தீர்வு..
பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர்,
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பணிகளுக்கு இடையூறு செய்யமாட்டார் என தெரிவித்தார்.
நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு விரைவான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க மக்கள் தலைவர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும், எதிர்காலத்தில் நாட்டை கட்டியெழுப்புவதற்கு தேவையான ஆதரவை சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து அரசாங்கம் பெற்றுக்கொள்ளும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
நாம் ஒருவருக்கொருவர் கட்சி அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு மக்களின் மேன்மைக்காக உழைக்க வேண்டும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.