சீண்டாதீங்க அதிநவீன ஆயுதங்களை அனுப்பியிருக்கேன்! ஜோ பைடன் எச்சரிக்கை
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் அது வரலாற்றில் இதுவரை சந்திக்காத பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைனுக்கு இதுவரை 600 மில்லியன் டாலர் மதிப்புடைய நவீன பாதுகாப்பு ஆயுதங்களை அனுப்பி வைத்திருப்பதாகவும்,உக்ரைனுடன் போரிடும் ரஷ்யர்களுக்கு உயிர்ச்சேதம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷியாவுக்கும் உக்ரைன் நாட்டுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. 2014 ஆம் ஆண்டின் முற்பகுதியில் உக்ரேனியர்கள் தங்கள் ரஷ்ய சார்பு ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்தபோது, ரஷ்யா, உக்ரைனின் தெற்கு கிரிமியா தீபகற்பத்தை கிளர்ச்சியாளர்களின் துணையுடன் கைப்பற்றி தங்கள் நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகின்றது.
இதனிடையே உக்ரைன் மீது ரஷ்யா விரைவில் படையெடுக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதே நேரத்தில் உக்ரைன் அருகே குவிக்கப்பட்டுள்ள படைகளை பின்வாங்குமாறும் அமெரிக்க விடுத்த கோரிக்கை ரஷ்யாவால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.