கோட்டாபய மீது வைத்த நம்பிக்கையின் பாவத்தை அனுபவிக்கின்றோம்! கவலையில் விஜேதாச ராஜபக்ச
பசில் ராஜபக்சவுக்கோ அரசாங்கத்திற்கோ தொடர்ந்தும் நாட்டை நிர்வாகம் செய்ய முடியாது எனவும் மக்கள் தற்போது புதிய சக்தியை உருவாக்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். வாக்களித்த 69 லட்சம் ம்ககளுக்கு மாத்திரமல்ல, சர்வதேசத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் அரசாங்கம் மீறியுள்ளது.
அரசாங்கம் ஒரு வாக்குறுதியை நிறைவேற்றி இருந்தால் அதனை வெளியிட முடியும். ஜனாதிபதி தற்போது பொம்மை, அதனை ஆட்டுவிற்கும் பொம்மலாட்டகாரன் பசில் ராஜபக்ச.
மகிந்த ராஜபக்ச தற்போது புடலங்காய் நிலைமைக்கு சென்றுள்ளார்.
20வது திருத்தச் சட்டத்தை ஆதரித்தமை குறித்து கவலையில் இருக்கின்றேன். ஜனாதிபதி மீது வைத்த நம்பிக்கையின் பாவத்தை தற்போது அனுபவித்து வருகின்றோம் எனவும் விஜேதாச ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri