ரணிலை விரும்பாதவர்களும் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கான காரணத்தை வெளியிட்ட ஜனாதிபதி
அரசியல் வட்டாரத்தில் பலர் தன்னை விரும்பவில்லை என்பது தமக்கு நன்றாக தெரியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் நாட்டை பழைய நிலைக்குக் கொண்டு வரவும் முடியும் என்ற காரணத்தினால், பகுதி அளவில் ஓய்வு பெற்றுக்கொண்டிருந்த தான் மீண்டும் களம் புகுந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு விமர்சனங்களையும் தாண்டி பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
பொருளாதாரத்தில் மாற்றம்
அத்துடன், துரித கதியில் பொருளாதாரத்தில் மாற்றம் கொண்டுவர வாய்ப்பு கிடைத்தது என்றும் இந்த அரசியல் முறைமையில் தன்னோடு இணைந்து கொண்ட அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் இருக்கும் பலர் தனிப்பட்ட ரீதியில் தன்னை விரும்பவில்லை எனவும் இந்த பணியை செய்து முடிக்க தன்னால் முடியும் என்ற காரணத்தினாலே அவர்கள் ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆரம்ப வெற்றியை கட்டி எழுப்ப வேண்டிய கடப்பாடு காணப்படுவதாகவும் அரசியல் முரண்பாடுகளை களைந்து ஆக்கபூர்வமான தீர்வு திட்டங்களை எட்டுவது அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
