புலஸ்தினி தொடர்பில் சரியான தகவல் தெரியாது! - அமைச்சர் வீரசேகர
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் தொடர்பில் சரியான தகவல் தெரியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது சாரா தொடர்பில் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அவர்,
“சாரா போய்விட்டாரா என்பது தொடர்பில் எங்களுக்கு தெரியாது. தப்பித்து விட்டாரென பொய்யாக தகவல் வழங்கி விட்டு வேறு இடத்தில் இருக்கின்றாரா? அல்லது இறந்துவிட்டாரா? என்று தெரியவில்லை.
இது குறித்து தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதிமுன் கொண்டுவருவதற்கு வலுவான சான்றுகள் உள்ளதாகவும் அவர் இதன் போது கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “வழக்குத் தாக்கல் செய்யத் தேவையான தகவல்களைக் கொண்ட 08 பெரிய கோப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன
"தாக்குதல் தொடர்பான அனைத்து விசாரணைகளையும் முடித்த பின்னர், நேரடியாக சம்பந்தப்பட்ட மற்றும் சதிகாரர்கள் மீது வழக்குத் தொடர எட்டு பெரிய கோப்புகளை ஒப்படைத்துள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.





பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
