சு.கவை ஐ.தேகவுடன் இணைக்கும் திட்டம் எதுவும் என்னிடம் இல்லை : சந்திரிகா சுட்டிக்காட்டு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைப்பதற்கு எந்த வகையிலும் முயற்சிக்கவில்லை எனவும், கட்சியைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று பூஜ்ஜிய நிலைக்கு வந்துள்ளது. கட்சி பல கூறுகளாகப் பிளவுபட்டுள்ளது.
ஒத்துழைப்பு வழங்கத் தயார்
கட்சியை மீள கட்டியெழுப்புவதென்பது இலகுவான விடயமாக அமையாது. அவ்வாறான முயற்சி எடுக்கப்பட்டால் அதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார். கிராம மட்டத்திலான மக்கள் சுதந்திரக் கட்சியுடன் உள்ளனர்.
எனவே, புதிய நபர்களுடன் சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்ப முடியும் என நம்புகின்றேன். எனது மகன் அரசியலுக்கு வரமாட்டார்.
60 வயது கடந்ததும் செயற்பாட்டு அரசியலில் இருந்து ஒதுங்குவேன் எனக் கூறினேன். அவ்வாறு செய்தேன். கட்சிகள் மற்றும் அமைப்புகள் விடுத்த கோரிக்கையின் பிரகாரமே 2015 ஆம் ஆண்டில் பொது வேட்பாளர் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தேன்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைக்கும் திட்டம் எதுவும் என்னிடம் இல்லை என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா





ரோஹினி அம்மாவை நேரில் சந்தித்த மீனா, க்ரிஷ் செய்ய மறுக்கும் காரியம்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam
