எதிர்காலத்தில் எந்த பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமோ தெரியாது - அமைச்சர் பந்துல குணவர்தன
எதிர்காலத்தில் நாட்டில் எந்த பொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்பதை தன்னால் கூற முடியாது எனவும், சில மூலப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டால் நாட்டில் சில தொழிற்சாலைகளைக் கூட நடத்த முடியாத நிலைமை உருவாகலாம் எனவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardana) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
எந்த பொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்பதைக் கூற முடியாது. சீனா உலகில் உள்ள மிகப் பெரிய நாடுகளில் ஒன்று. ஐந்து நாட்கள் வேலை செய்யும் நாடு.
ஒரு நாள் மாத்திரமே திறக்கப்படுமாயின் உலகில் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். நாம் பெரும்பாலான மூலப் பொருட்களைச் சீனாவிலிருந்தே இறக்குமதி செய்கின்றோம்.
எமக்கு மூலப் பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டால், எம்மால் சில தொழிற்சாலைகளை இயங்கச் செய்ய முடியாது. இதுதான் உலகில் தற்போதுள்ள புதிய சவால்.
உலகில் எரிபொருள் விலை அதிகரிப்பது இப்படித்தான், இலங்கை அதனை இப்படிதான் கட்டுப்படுத்த வேண்டும் எனச் சிலர் கூறுவார்களாயின் அது செயல் முறை சாத்தியமற்றது. உலக சந்தையில் எரிவாயுவின் விலை 130 வீதமாக அதிகரித்துள்ளது.
அந்த விலையைக் குறைக்கும் முறையை அறிந்தவர்கள் எவராவது இருந்தால் என்னைச் சந்திக்குமாறு கூறுங்கள் எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
Red Card வாங்கி பிக்பாஸில் இருந்து வெளியேறிய கம்ருதீன், பார்வதி வாங்கிய சம்பளம்... யார் அதிகம் பாருங்க Cineulagam
Super Singer 11: இலங்கை குயிலுக்கு சரண் ராஜா கொடுத்த பரிசு... எமோஷ்னலில் ஒட்டுமொத்த அரங்கம் Manithan