நான் நாட்டைவிட்டு தப்பியோடவில்லை! - நிஸ்ஸங்க சேனாதிபதி அறிவிப்பு
உத்தியோகபூர்வ வேலை நிமித்தம் காரணமாக தான் வெளிநாடு சென்றுள்ளதாக அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி அறிவித்துள்ளார்.
தற்போது சுவிட்சர்லாந்தில் இருக்கும் அவர் நேற்றைய தினம் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் இதனை கூறியுள்ளார். தான் நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை என்றும், தப்பிச் செல்ல எந்த காரணமும் இல்லை என்றும் அவர் கூறினார்.
தான் தற்போது பணி நிமித்தமாக சுவிட்சர்லாந்தில் இருப்பதாகவும், தனது கடமைகள் சர்வதேச சமூகத்திடம் இருப்பதால், பணியின் தன்மைக்கேற்ப எந்த நாட்டுக்கும் செல்லலாம் என்றும் அவர் கூறினார்.
தனது கடமைகளை முடித்துக் கொண்டு மீண்டும் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் பல வருடங்களாக சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விஜய்யை நெஞ்சில் டாட்டூவாக குத்தியும் இப்படியா.. வேறு கட்சியில் இணைந்த தாடி பாலாஜி, விமர்சிக்கும் நெட்டிசன்கள் Cineulagam
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam