கும்பிட்டு கேட்கின்றேன் விமான நிலையங்களை இப்படி திறக்க வேண்டாம்! - பேராசிரியர் அர்ஜூன டி சில்வா
கும்பிட்டு கேட்கின்றேன் விமான நிலையங்களை தற்பொழுது திறக்கப்பட்டுள்ளது போன்று திறக்க வேண்டாம் என பேராசிரியர் டொக்டர் அர்ஜூன டி சில்வா தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தோன்றிய போது இந்தக் கோரிக்கையை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார். உலகின் ஏனைய நாடுகளைப் போன்று ஆபத்தான நாடுகளிலிருந்து இலங்கைக்கு பயணம் செய்வதனை தடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென் ஆபிரிக்காவிலிருந்து இலங்கை பயணம் செய்வதற்கு தடை கிடையாது எனவும் இது ஆபத்தானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆபத்தான கொவிட் திரிபுடைய தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளிலிருந்து இலங்கைக்கு பயணிகள் வருவது கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பாதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் ஏனைய நாடுகளில் சிகப்பு பட்டியலிடப்பட்ட நாடுகளின் வரிசையை இலங்கையும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியா போன்று நாட்டு மக்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்ட நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதில் பிரச்சினையில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.