இலங்கையின் மொத்த கடனையும் அடைக்க நான் தயார்: ஐ.நா சபை ஏற்றுக் கொள்ளுமா? தனிநபர் போராட்டம் (Video)
இலங்கையின் மொத்த கடனையும் அடைக்க நான் தயார். ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொள்ளுமா? எனத் தெரிவித்து வவுனியாவில் தனிநபர் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.
வவுனியா நகர மணிக்கோபுர சந்தியில் நின்று குறித்த நபர் இன்று (29.12) போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.
இதன்போது, இலங்கை தேசியக் கொடியை ஏந்தியிருந்ததுடன் 'இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார். இதை ஐ.நா சபை ஏற்றுக் கொள்ளுமா?, எங்களை துன்பத்தில் இருந்து காப்பாற்றுமா? இதற்கு மக்கள் நாம் ஒன்றுபடுவோம் ' என எழுதப்பட்ட சுலோக அட்டையையும் ஏந்தியிருந்தார்.
குறித்த தனிநபரின் கவனயீர்ப்பு போராட்டத்தால் மணிக்கூட்டு கோபுர சந்தியில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக பொலிஸார் அறிவுறுத்தியதையடுத்து, பழைய பேருந்து நிலையம் முன்பாக சென்று சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதுடன்,
அதன் பின் அங்கிருந்து குறித்த நபர் சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
