நான் குற்றவாளி அல்ல : நீதிமன்றத்தில் முன்னாள் பொலிஸ் மா அதிபர்
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட உள்ளது என்பதற்கான போதுமான புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தும், அதனை தடுக்க எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமை மற்றும் கடமையை செய்ய தவறியமை உட்பட தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு தான் குற்றவாளியல்ல என முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அவர் இதனை கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு, நாமல் பலல்லே, ஆதித்திய பட்டபெந்திகே, மொஹமட் இர்ஷாட் ஆகிய மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூன்று இன்று விசாரணைக்கு எடுத்த போதே பூஜித இதனை குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது. அப்போது அதில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தான் குற்றவாளி அல்ல என அவர் கூறியுள்ளார்.
இதன் பின்னர் முறைப்பாட்டாளர் சார்பில் நேர்நிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தினம், சஹ்ரான் ஹாசீமின் தலைமையிலான தேசிய தவ்ஹித் ஜமாத் என்ற அடிப்படைவாத அமைப்பினர் நாடு முழுவதில் 8 இடங்களில் நடத்திய தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களை அடிப்படையாக கொண்டு சட்டமா அதிபர், குற்றம் சுமத்தப்பட்டுள்ளவருக்கு எதிராக இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாக கூறியுள்ளார்.
தாக்குதல் நடத்தப்பட உள்ளது என்ற தகவல் கிடைத்திருந்தும், இலங்கை குடியரசின் பொலிஸ் மா அதிபர் என்ற வகையில் கவனமின்றி கடமையை செய்ய தவறி, அதனை தடுக்காததன் மூலம் இலங்கை குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் 102 ஷரத்திற்கு அமைய தவறு செய்துள்ளதாக குற்றம் சுமத்தி, சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் திலீப பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
குற்றம் சுமத்தப்பட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்காக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையான காலத்தில் நடந்த சம்பவங்களை கோர்வையாக சாட்சியங்களாக முன்வைக்கப்பட்டுள்ளதாக திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணைகளை நாளைய (23) திகதிக்கு ஒத்திவைத்தனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு எப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தினம் நடந்த பயங்கரவாத தற்கொலை குண்டு தாக்குதல்களில் 275 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 500 பேர் வரை காயமடைந்தனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 14 மணி நேரம் முன்

குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதை அழுத்தமாக கூறுகிறோம்! பேரறிவாளன் விடுதலை குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து News Lankasri

கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இது தான் ! கொண்டாடப்போகும் ரசிகர்கள்.. Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022