அமெரிக்கா மத்தியஸ்தம் வகிக்க வேண்டுமென கோரவில்லை! - சுமந்திரன் மறுப்பு
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கும் இலங்கை அரசாங்கத்தின் முன்னெடுப்புகளில் அமெரிக்க மத்தியஸ்தம் வகிக்க வேண்டுமென தான் தெரிவித்ததாக வெளியாகும் செய்தியை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் மறுத்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகமான தி ஐலண்ட் இவ்வாறு பொய்யான தகவலை செய்தியாக வெளியிட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் எம்.ஏ சுமந்திரன் கூறியுள்ளார்.
தி ஐலண்ட் பத்திரிகையில் குறித்த செய்திக்கு பொறுப்பான தினசேன ரத்துகமகே இவ்வாறு பொய்யான செய்தியை வெளியிடுவது இது முதன்முறை அல்லவெனவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறெனினும் இந்த செய்தி முற்றிலும் பொய்யானது எனவும், தான் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவில்லை எனவும் எம்.ஏ சுமந்திரன் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
This is an absolutely false story. To start with, I have not been in Jaffna after 1 Aug 2021! This is not the first time #Dinasena_Ratugamage has published mischievous stories like this in @TheIsland concerning @TNAmediaoffice https://t.co/6M8BoYbhOc
— Abraham Sumanthiran (@MASumanthiran) August 27, 2021
இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் ஒரு தீர்வை முன்வைக்க வேண்டுமெனவும், அந்த தீர்வுகளை ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்கும் மத்தியஸ்தராக அமெரிக்கா இருக்க வேண்டும் எனவும் சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளதாக தி ஐலண்ட் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.
அத்துடன், தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த முன்மொழிவுகளுக்கு ஆதரவைப் பெறுவதற்கு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பெச்லெட் பதவியில் இருப்பது பெரும் நன்மை என சுமந்திரன் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடருக்கு முன்னதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் தங்களின் பரிந்துரைகள் குறித்து விவாதிக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரம் ஒதுக்கிக் கேட்டதாக எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானின் எச்சரிக்கை., B-2 பாம்பர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா - புதிய கட்டத்திற்கு செல்லும் மோதல் News Lankasri

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri
