நான் குற்றவாளி இல்லை: டயானா கமகே பகிரங்கம்
தான் குற்றவாளி இல்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கொழும்பு நீதவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
07 குற்றப்பத்திரிகைகள்
இன்றைய தினம்(01) அவரது வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அவருக்கு எதிராக நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட 07 குற்றப்பத்திரிகைகளை வாசித்த பின்னரே டயானா கமகே இதனைத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இது தொடர்பான 07 குற்றப்பத்திரிகைகளை விசாரிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், குற்றப்பத்திரிகையில் சாட்சிகளாக குறிப்பிடப்பட்டுள்ள 01 மற்றும் 13ஆம் சாட்சிகளை எதிர்வரும் ஒக்டோபர் 24ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை பிறப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், பிரதிவாதி டயானா கமகே சார்பில் முன்னிலையான ஜனாதிபதியின் சட்டத்தரணி சானக ரணசிங்க, இந்த வழக்கு தொடர்பான உண்மைகளை முன்வைக்க வேண்டிய அவசியம் இருப்பின் எதிர்காலத்தில் பிரேரணை மூலம் நீதிமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
செல்லுபடியாகும் வீசாக்கள் இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை, குடிவரவு மற்றும் குடிவரவு அதிகாரிகளிடம் பொய்யான வாக்குமூலங்களை வழங்கியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் டயானா கமகேவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்தக் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |