நாட்டை கட்டியெழுப்பும் திட்டம் என்னிடம் உள்ளது! திலித் ஜயவீர
நாட்டை கட்டியெழுப்பும் திட்டம் என்னிடம் உள்ளது என ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
நாட்டை கட்டியெழுப்புவதற்கு இன மத பேதங்களை கடந்து இணைந்து கொள்ள வேண்டுமெனவும் அதனூடாக நாட்டை பாரிய வெற்றி நோக்கி நகர்த்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காலி கலுவெல்ல பகுதியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

யாருக்கு வாக்களிப்பது
நாட்டை அபிவிருத்தி செய்யக்கூடிய நபர்களை இதற்காக இணைத்துக் கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தம்முடன் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் 47 வீதமானவர்கள் இன்னமும் யாருக்கு வாக்களிப்பது என்பதனை தீர்மானிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனச்சாட்சிக்கு இணங்க மக்கள் வாக்களிக்க வேண்டுமென திலித் ஜயவீர கோரியுள்ளார்.
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
இந்தியாவின் மூலோபாய நடவடிக்கை - வியட்நாம், இந்தோனேசியாவிற்கு பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி News Lankasri