நானும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் அபிமானி! - உதய் மகேஷ்

The Family Man Uday Mahesh
By Murali Jun 09, 2021 11:47 PM GMT
Report
Courtesy: BBC Tamil

இயக்குநர், நடிகர் என பன்முகம் கொண்டவர் உதய் மகேஷ். தற்போது அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் 'தி ஃபேமிலிமேன்' தொடரில் 'செல்லம்' கதாபாத்திரம் ரசிகர்களிடையே பேசு பொருளாக மாறியிருக்கிறது.

சமூக வலைதளங்களில் இந்த கதாபாத்திரம் ட்ரெண்ட் ஆக, அது குறித்து பிபிசி தமிழுக்காக அவரிடம் பேசினோம். அதில் இருந்து.

செல்லம் கதாப்பாத்திரத்திற்கு நீங்கள் தேர்வான கதையை சொல்லுங்கள்?

"மும்பையில் இருக்கக்கூடிய ஒரு 'காஸ்டிங்' நிறுவனத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர்கள் 'தி ஃபேமிலிமேன்' சீரிஸ் நடிகர்கள் தேர்வுக்காக சென்னை வந்திருந்தார்கள். அப்போது முதலில் 'செல்லம் சார்' கதாபாத்திரம் தவிர்த்து வேறு இரண்டு கதாபாத்திரங்களுக்கான தேர்வு நடந்தது. அழகம்பெருமாளின் கதாபாத்திரம் மற்றும் ஜெபராஜின் கதாபாத்திரம்தான் அவை. பிறகு இரண்டு மாதங்களுக்கு பிறகு 'செல்லம்' கதாபாத்திரத்திற்கு அழைத்தார்கள்".

'தி ஃபேமிலி மேன்' சீசன்1 பார்த்தீர்களா? இரண்டாவது சீசனின் செல்லம் கதாபாத்திரத்திற்காக உங்களை அணுகியபோது என்ன நினைத்தீர்கள்?

"எனக்கு சீசன் 1 மிகவும் பிடித்திருந்தது. இரண்டாவது சீசனில் நானும் இருப்பேன் என அப்போது எதிர்பார்க்கவில்லை. கதாபாத்திரத்திற்காக அணுகியபோது நடிகனாக என்னுடைய பணியை செய்தேன். மற்றபடி, எனக்கு பிடித்த இணையதொடரில் மனோஜ் பாஜ்பயி உள்ளிட்ட நடிகர்களோடு நடித்ததில் மகிழ்ச்சி"

கே: இப்போது இணையதளத்தில் 'செல்லம்' கதாபாத்திரத்தை வைத்து நிறைய மீம்ஸ் வந்து கொண்டிருக்கிறதே, கவனித்தீர்களா?

"சமூக வலைதளங்களில் வந்த மீம்ஸ் எல்லாம் பார்த்தேன். இதை நான் எதிர்ப்பார்க்கவில்லை. ஏனெனில் இதில் என்னுடையது சிறிய கதாப்பாத்திரம்தான். அதுமட்டுமில்லாமல், மனோஜ் பாஜ்பயி, சமந்தா, ப்ரியாமணி உள்ளிட்ட பலரும் இதில் உள்ளனர். அவர்களது கதாபாத்திரங்களை தாண்டி என்னுடையது கவனிக்கப்பட்டது மகிழ்ச்சியான ஒன்று.

ரசிகர்களுக்கும், 'செல்லம்' கதாபாத்திரத்தை வடிவமைத்த இந்த தொடரின் இயக்குநர்கள் ராஜ், டிகே இவர்களுக்கு நன்றி. படப்பிடிப்பின் போதே, இந்த கதாபாத்திரத்தை வைத்து கலகலப்பாக சென்றது. எங்களுக்கு பிடித்தது போலவே ரசிகர்களுக்கும் பிடித்திருக்கிறது. சமூக வலைதளங்களில் இதற்கான மீம்ஸ் பார்த்தபோது பாசிட்டிவ் ஆகவே பார்த்தேன்.

நிறைய மீம்ஸ்கள் ரசிக்கும்படியாகவே இருந்தன. அதில் கூகுள் என்பதற்கு பதிலாக 'செல்லம்' என்று போட்டதை மிகவும் ரசித்தேன்".

கே: செல்லம் கதாபாத்திரத்திற்கு இது போன்ற ரெஸ்பான்ஸ் இருக்கும் என எதிர்ப்பார்த்தீர்களா?

"நிச்சயமாக இல்லை. சமூக வலைதளங்களில் இந்த கதாப்பாத்திரம் ட்ரெண்ட் ஆன போது என்னுடைய நண்பர் ஒருவர்தான் இதை தெரியப்படுத்தினார். நண்பர்கள், குடும்பம் என அனைவருக்கும் இதில் ஆச்சரியம்தான். செல்லம் கதாப்பாத்திரம் போன்று நண்பர்களுக்கு உதவி செய்வது, உளவு வேலை பார்ப்பது என என்னுடைய இளமை காலத்தில் இருந்திருக்கிறேன்.

நண்பர்களும் அதை சொல்லி மகிழ்ந்தார்கள். இதுமட்டுமில்லாமல், செல்லம் கதாப்பாத்திரத்திற்கு என தனியாக சீரிஸ் வேண்டும் என்றெல்லாம் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இதுகுறித்து எதுவும் வாய்ப்பு வந்தால் மகிழ்ச்சிதான்.

அதேபோல, 'மணி ஹெய்ஸ்ட்' தொடரின் 'புரொஃபசர்' கதாப்பாத்திரத்துடன் 'செல்லம்' கதாப்பாத்திரத்தை ஒப்பிடுவதும் பார்க்க முடிகிறது. உங்களை போலவே நானும் 'மணி ஹெய்ஸ்ட்' தொடரின் ரசிகன்தான். அதனுடன் ஒப்பிடும் அளவுக்கு 'செல்லம்' கதாபாத்திரம் பெரியதா என தெரியவில்லை. ஆனால், இதுவும் மகிழ்ச்சிதான்".

கே: 'தி ஃபேமிலிமேன்' தொடருக்கு ஆதரவு, எதிர்ப்பு என கலவையான விமர்சனங்களை பார்க்க முடிகிறதே?

"தமிழுணர்வு இங்கு எல்லாருக்குமே உண்டு. இந்த கதை சரியானதா தவறானதா என முடிவெடுக்கும் இடத்தில் நான் இல்லை. ஏனெனில், இதில் நடிக்கும் போது எனக்கு இதன் முழு கதையும் தெரியாது.

என்னுடைய கதாபாத்திரம் மட்டும்தான் தெரியும். இது பார்த்தவர்களை புண்படுத்தியிருந்தால் அது தொடர்பாக அவர்களுடைய கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். மற்றபடி இதில் என்னுடைய தனிப்பட்ட கருத்தை சொல்ல முடியாது.

நானும் ஈழத்தலைவர் பிரபாகரனின் அபிமானி. தமிழ் ஈழம் குறித்தான நிறைய விஷயங்களுக்கு ஆதரவாக இருந்திருக்கிறேன். அதனால், இதை கதையாக பார்த்துவிட்டு செல்வதுதான் பரவாயில்லை. அதையும் தாண்டி, இது தமிழ் உணர்வுகளை பாதித்திருக்கிறது என்றால் அதுவும் தவறுதான்".

கே: இந்த கதை புனைவுதான் என்றாலும், 'இதுதான் உண்மை' என பார்ப்பவர்கள் நம்பிவிடக்கூடிய அபாயமும் உண்டு என்கிற கருத்தையும் பார்க்க முடிகிறதே?

"சினிமாவில் சொல்லக்கூடிய விஷயங்களுக்கு நீங்கள் சொல்வது போன்ற அபாயம் உண்டுதான். அதிலும் இதுபோன்ற விஷயங்களை நாம் கவனமாக கையாள வேண்டும். இதில் தவறாக காட்டப்பட்டிருந்தால் அது வருத்தம்தான். படைப்பாளிகள் வரலாறை காட்சிப்படுத்தும்போது உண்மை என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்

. அந்த வகையில், இன்னும் சரியான தகவல்களை இதில் கொடுத்திருக்கலாமோ என்று தான் எனக்கும் தோன்றியது. ஏனெனில், ஈழம் என்பது தமிழர்களின் உணர்வுபூர்வமான விஷயம்"

கே: இயக்குநர், திரைப்படம், சீரியல், வெப்சீரிஸ் நடிகர் என பல தளங்களில் இயங்குபவர் நீங்கள். இந்த பன்முக பயணம் பற்றி சொல்லுங்களேன்...

"இயக்குநர் ஆகும் எண்ணத்தில்தான் நான் சினிமாவிற்குள் நுழைந்தேன். இரண்டு படங்களும் இயக்கினேன். பிறகு சூழ்நிலையால் நடிகனாக மாறினேன். அதுவும் ரசித்துதான் செய்தேன். சில வருடங்களுக்கு முன்பு நான் நடித்திருந்த 'ஆஃபிஸ்' சீரியல் ரசிகர்களிடையே என்னை கொண்டு போய் சேர்த்தது.

என்னுடைய நண்பர் ரமணகிரி வாசன்தான் இதன் இயக்குநர். இந்த கதாப்பாத்திரத்திற்கு என்னை அழைத்த போது சீரியலில் பெரிதாக என்ன இருந்துவிட போகிறது என்று ஆர்வம் இல்லாமல்தான் போனேன். முதல் இரண்டு மாதங்கள் அந்த கதாப்பாத்திரத்திற்கு கவனம் இல்லாமல் இருந்தது.

பிறகுதான் அதை கவனித்து நடிகனாக எனக்கு அங்கீகாரம் கிடைத்தது. இரண்டாவது சீசன் எடுக்க அப்போது திட்டம் இருந்தது. ஆனால், சில காரணங்களால் அது நடக்க முடியாமல் போனது.

பிறகு 'மூடர்கூடம்', 'நேர்கொண்ட பார்வை', 'கபாலி' உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தேன். இப்போது மீண்டும் படம் இயக்குவதற்கான வேலை நடந்து வருகிறது. என்னுடைய சினிமா பயணத்தில் சிறந்த விஷயமாக இயக்குநர் பாலச்சந்தர் அவர்களுடன் இருந்த மூன்று வருடங்களை சொல்வேன்.

கல்லூரி முடித்து வேலை பார்த்து விட்டு மீண்டும் கல்லூரிக்கு சென்றால் எப்படி இருக்கும்? அதுபோன்ற ஒரு அனுபவம்தான் அவருடன் இருந்தது. சினிமா கற்றுக்கொள்வதற்கான பல்கலைக்கழகம் அவர்".

கே: கோவிட் பொதுமுடக்க காலம் உங்களுக்கு எப்படி உள்ளது?

"எல்லாரையும் போலவே எனக்கும் கடினமாகவே உள்ளது. அடிப்படை வாழ்க்கையே கேள்விக்குள்ளான காலம் இது. தனிநபர் இடைவெளியை நாம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

அதேசமயம் மனதால் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மனநலன் இந்த காலக்கட்டத்தில் மிக முக்கியமான விஷயம். சீக்கிரமே இதில் இருந்து மீள்வோம் என நம்பிக்கை உள்ளது".

3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், Baden, Switzerland

31 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Toronto, Canada

31 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

31 Aug, 2010
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Brampton, Canada

29 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

01 Sep, 2014
23ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US