எனக்கும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த தோன்றுகின்றது - ஆளும் கட்சி எம்.பி ஆதங்கம்
எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசையில் நிற்கும் மக்கள் அரசாங்கத்தை 'Gota go Home என்று அழைப்பதில் ஆச்சரியமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் பேசிய அவர், மக்கள் வீதியில் இறங்கி அரசாங்கத்தை சபித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைக்கு அரசு சார்பிலும், பொதுஜன பெரமுன சார்பிலும் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
எவ்வாறாயினும், ஏழெட்டு மணி நேரம் மின்சாரம் இல்லாமல் வீட்டில் இருக்கும் போது தானும் வீதிக்கு வந்து போரிட முயற்சிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.





ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
