உச்ச அளவை தொட்ட இலங்கையின் நீர் மின் உற்பத்தி
நாட்டில் நீர் மின் உற்பத்தி உச்ச அளவில் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்பொழுது நாட்டில் நிலவிவரும் மழையுடனான காலநிலை காரணமாக இவ்வாறு மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
நீர் மின் உற்பத்தி நிலையங்களில் உச்ச அளவில் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மின் உற்பத்தி
குறித்த மின் உற்பத்தி நிலையங்களின் மின் பொறியியலாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை லக்ஷபான, புதிய லக்ஷபான, பொல்பிட்டிய, கெனியோன், விமலசுரேந்திர மற்றும் மேல் கொத்மலை நீர் மின் உற்பத்தி நிலையங்களின் மின் உற்பத்தியும் உச்ச அளவில் மேற்கொள்ளப்படுவதாக பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், நாட்டில் அண்மைய நாட்களாக கடுமையான மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri