மட்டக்களப்பில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் வெளியிட்டுள்ள உருக்கமான கோரிக்கை (Video)
தனது மனைவிக்கு நடைபெற்றது போன்ற துயரச்சம்பவம் இனியொருவருக்கு நடைபெறாத வண்ணம் சட்டம் நடவடிக்கையெடுக்க வேண்டும் என அண்மையில் மட்டக்களப்பில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரான க.செல்வராஜா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு அவரது தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது.
குறித்த சம்பவம் தொடர்பான வாக்குமூலம் பெறுவதற்காகக் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டதுடன், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சீ.றிஸ்வான் முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே தனது தாயின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களுக்கு மிக
விரைவில் தண்டனை வழங்கப்பட வேண்டும் என உயிரிழந்தவரின் மகள்
வலியுறுத்தியுள்ளார்.







