வெளிநாட்டிலிருந்து வந்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
குருணாகலில் மனைவியை கொடூரமாக கொலை செய்த நிலையில் கணவனும் தன்னுயிரை மாய்த்துள்ளார்.
இந்த சம்பவம் கொகரெல்ல, வேகம பிரதேசத்தில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மனைவியை கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்ததுடன், அந்த நபரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வேகம மற்றும் திவுலங்கடவல பிரதேசத்தை சேர்ந்த 49 மற்றும் 46 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆவார்.
குறித்த பெண் வெளிநாடு ஒன்றிலிருந்த நாடு திரும்பியுள்ள நிலையில் இந்த கொடூர செயல் அரங்கேறியுள்ளது.
17 வருடங்களாக பிரிந்து வாழ்ந்த நிலையில், தாயின் வீட்டில் தங்கியிருந்த மனைவியை, நேற்று கூரிய ஆயுதங்களால் வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரும் அதே வீட்டுக்கு அருகில் விஷம் குடித்து கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தற்கொலை என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொகரெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.