மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
குருணாகல், வெலகெதர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகோட்டே பகுதியில் மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளதாக கணவன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக கணவரால் தாக்கப்பட்டதில் 48 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்.
கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த பெண் ஒருவர் நேற்று மாவத்தகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
குடும்பத் தகராறு
இது தொடர்பில் கிடைத்த தகவலை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அம்பகோட்டே பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் கணவன் குடும்பத் தகராறு காரணமாக அவரைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் 50 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து வெலகெதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.