கணவனை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்த மனைவி
ஹம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம காவன்திஸ்ஸபுர பிரதேசத்தில் மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி கணவர் உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபரின் தாக்குதலில் நேற்று இரவு படுகாயமடைந்த நபர் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் திஸ்ஸமஹாராம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கணவன் பலி
காவன்திஸ்ஸபுர பிரதேசத்தில் வசிக்கும் 47 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கணவருக்கும், மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி கிரிக்கெட் மட்டையால் கணவரின் தலையில் அடித்ததாக விசாரணையில் தெரியவந்தது.
42 வயதான மனைவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திஸ்ஸமஹாராம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam