கொழும்பில் கர்ப்பிணி பெண்ணுக்கு கணவன் செய்த கொடூரம்
கொழும்பில் கர்ப்பிணி மனைவியைத் தாக்கி கருவை அழித்த குற்றச்சாட்டில் குற்றஞ்சாட்டப்பட்ட கைது செய்யப்பட்ட கணவர் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது கொலை என சந்தேகிக்கப்படுவதாகவும் சட்ட வைத்திய மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கிராண்ட்பாஸ் பொலிஸாருக்கு வழங்கிய அறிவித்தலை கருத்திற்கொண்டே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கணவன் - மனைவி மோதல்
சந்தேகநபரின் கணவர் மனைவியுடன் தொடர்ந்து முரண்பாடுகளை ஏற்படுத்தி வருவது தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
வயிற்றில் இருக்கும் குழந்தையின் தந்தை தொடர்பில் வாக்குவாதம் ஏற்பட்டு சந்தேகம் அடைந்த கணவர் மனைவியின் வயிற்றில் காலால் உடைத்ததாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
கவலைக்கிடமான நிலையில் இருந்த மனைவி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இரண்டு மாத கரு கலைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

படத்த பாத்துட்டு, என்னயா ம*ரு படம் எடுத்து வெச்சிருக்க-னு கேட்டாரு" - RK Selvamani Open talk Cineulagam
