கணவனை தொடர்ந்து மனைவியும் கோவிட் தொற்றினால் உயிரிழப்பு
வவுனியாவில் கடந்த வாரம் கோவிட் தொற்றால் உயிரிழந்தவரின் மனைவிக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார்.
வவுனியா வடக்கு அனந்தர் புளியங்குளம் பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் சில நாட்களுக்கு முன்பாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அந்த பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக வெலிக்கந்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.
இதேவேளை அவரது மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து குறித்த முதியவரின் மனைவிக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கொழும்பு - ஹோமாகம வைத்தியசாலையில் வைத்து இன்று உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை அவரது கணவனின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டிருந்த சில குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2011ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த வேலாயுதம், 7ஆம் அறிவு.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam
தீவு நாடொன்றை மொத்தமாக தாக்கவிருக்கும் புயல்: ஹொட்டல் ஒன்றில் சிக்கிய 200 பிரித்தானியர்கள் News Lankasri