32 வயது கணவன் கழுத்து நெறித்துக் கொலை - மனைவிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
இரத்தினபுரி மாவட்டம், தொடம்பே மண்டதெனிய பிரதேசத்தில் ஒரு பிள்ளையின் தந்தையைப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, கொலை செய்யப்பட்டவரின் மனைவி உள்ளிட்ட இருவரை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, இரத்தினபுரி பிரதான நீதிவான் ஜனிதான ரோஸனி உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த இந்திக்க சமன்குமார (வயது 32) என்பவர் கடந்த மாதம் 30ஆம் திகதி அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
ஆரம்பத்தில் அவர் கோவிட் வைரஸ் தொற்றினாலேயே உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
எனினும், பிரேத பரிசோதனையில் அவர் தூக்க மாத்திரை உட்கொண்டும் கழுத்து நெறித்தும் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையையடுத்து, குறித்த நபரின் மனைவியையும் மற்றுமொரு நபரையும் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam
