பொலிஸ் நிலையத்திற்குள் மனைவி மீது அசிட் தாக்குதல் மேற்கொண்ட கணவர்
தென்னிலங்கையில் பொலிஸ் நிலையத்திற்குள் கணவன் மேற்கொண்ட அசிட் தாக்குதலில் பெண்ணொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
உடுகம பொலிஸ் நிலையத்தில் கணவரினால் மேற்கொள்ளப்பட்ட அசிட் தாக்குதலில் காயமடைந்த மனைவி காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய கணவன் - மனைவிக்கு இடையில் தொடர்ந்து நீண்ட காலமாக குடும்ப பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
இதனை விசாரணை செய்வதற்காக பொலிஸ் நிலையத்திற்கு வருமாறும் பொலிஸார் இந்த தம்பதிக்கு அழைப்பு விடுத்தனர். எனினும் குறித்த இருவரும் காலை 5.30 மணியளவில் பொலிஸ் நிலையத்ததிற்கு வருகைத்தந்துள்ளனர்.
பொலிஸ் நிலையத்திற்குள் நுழையும் போது அசிட் போத்தல் ஒன்றை மறைத்து கொண்டு வந்த கணவன், மனைவியின் முகத்தில் வீசியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த பெண்ணை பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பொலிஸ் அதிகாரி ஒருவரும் அசிட் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். அசிட் தாக்குதலுக்குள்ளான பெண் 28 வயதுடையவர் எனவும் சந்தேக நபரான கணவர் 32 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
உடுகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri