கர்ப்பிணியான மனைவியை சுமந்து சென்ற கணவனுக்கு சில வருடங்களின் பின் காத்திருந்த பெரும் துயரம்
இலங்கையில் உள்ள ஒரு பிரதேசத்தில் கர்ப்பிணி மனைவியை கணவன் ஒருவர் வைத்தியசாலைக்கு 22 கிலோமீட்டர்கள் சுமந்து கொண்டு சென்ற சம்பவம் கடந்த காலங்களில் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இச்சம்பவம் கடந்த 2021 ஆம் ஆண்டு காலி - ஹினிதும பிரதேசத்தில் இடம்பெற்றது.
ஆனால் தற்போது குறித்த பெண் கணவனையும், குழந்தையையும் பிரிந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
5 மணித்தியாலங்களுக்குள் வைத்தியசாலைக்கு
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மனைவிக்கு குழந்தை பிறக்க இருக்கும் தருணத்தில் அவரது கணவர் குமார, வெள்ளத்தின் நடுவே 22 கிலோமீட்டர்கள் தன் கர்ப்பிணி மனைவியை தூக்கியப்படி மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.
அவரது முயற்சியானது சமூக ஊடகங்களில் பரவலான பாராட்டுக்களை பெற்றிருந்தது.

மேலும், குமார இலங்கையின் சமூக ஊடகங்களில் அக்காலத்தின் மிகவும் அன்பான கணவர் என்று எல்லோராலும் பாராட்டப்பட்டார்.
சம்பவத்தில் உள்ளூர் சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவ கவனிப்பின் அவசியத்தை அவர்களுக்கு அறிவித்தார், ஆனால் வெள்ளம் காரணமாக ஒரு நோயாளர் காவுவண்டி கூட அவர்களின் இடத்திற்குச் செல்ல முடியவில்லை.
இவ்வாறான நிலையில் 7 மாத கர்ப்பிணியான மனைவி திடீரென சுகயீனமடைந்துள்ளார். வயிற்றிலுள்ள குழந்தைக்கு எவ்வித அசைவுகளும் இல்லை என மனைவி குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது குடும்ப சுகாதார அதிகாரியை தொடர்பு கொண்ட போது 5 மணித்தியாலங்களுக்குள் மனைவியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆபத்தின்றி உயிர் தப்பிய மனைவி
முழு பிரதேசமும் நீரில் மூழ்கியுள்ளதுடன், பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் மனைவியை வைத்தியசாலைக்கு தூக்கி செல்ல சுரேஷ் முடிவு செய்தார்.

அதற்கமைய வைத்தியசாலைக்கு மனைவியை தூக்கி சென்று கணவன் சுரேஷ் குமார அனுமதித்துள்ளார்.
இதனையடுத்து, மனைவியும் குழந்தையும் ஆபத்தின்றி உயிர் தப்பியதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
குறித்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்த மக்கள் சுரேஷ் குமார் வீட்டிற்கு சென்று தொடர்ந்து உதவி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில், சில தினங்களின் பின் குமாரவின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் குழந்தையையும் குமாரவே வளர்த்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய வீடு கட்டியுள்ள பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்... குடும்பத்துடன் எடுத்த போட்டோ Cineulagam
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri