கணவனுக்கு மனைவி கொடுத்த மனிதாபிமானமற்ற தண்டனை
மாத்தறை - வெலிகம (Matara) பிரதேசத்தில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த நபர் ஒருவர் தனது மனைவியால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாத்தறை, வெலிகம, கொஸ்கஹஹேன பிரதேசத்தினை சேர்ந்த 42 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியை தாக்கியதால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
இந்நிலையில், நேற்று இரவு போதையில் வந்து மனைவியை தாக்க முயன்ற போது மனைவி தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து வீட்டின் முன் உள்ள மின்கம்பத்தில் கணவனை கட்டிப்போட்டு தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலின் போது மயக்கமடைந்த அவர் வெலிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாாரம் தெரிவித்துள்ளது.
மின்கம்பத்தில் கட்டப்பட்ட கயிற்றில் சிக்கி மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன், சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவியை வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
