கொடூரமாக தாக்கப்பட்ட மனைவி மரணம் : நாடகமாடிய கணவன் அதிரடியாக கைது
களுத்துறையில் இளம் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மனைவியை கொடூரமாக தாக்கி காயப்படுத்தி , விபத்தில் காயமடைந்ததாக கூறி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 30 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான தனது மனைவி முச்சக்கரவண்டியில் இருந்து வீழ்ந்து காயமடைந்துள்ளதாக கூறி பதுரலிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
எனினும் குறித்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டின் கீழ் பதுரலிய பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் உறவினர்கள் செய்த முறைப்பாட்டுக்கு பொலிஸார் விசாரணையை முன்னெடுத்தனர்.
இதற்கமைய 10 மாதணங்களின் பின்னர் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

உறவுகளின் மீது அதிமான அக்கறை செலுத்தும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... இவங்கள மிஸ் பண்ணிடாதீங்க Manithan
