விகாரைக்கு சென்ற மனைவி - கொடூரமாக கொலை செய்யப்பட்ட கணவன்
நுவரெலியா மதுரட்ட கலபட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வீட்டில் இருந்த போது கொல்லப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
கலபட பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று உயிரிழந்த நபரின் மனைவி பொசன் போயாவை முன்னிட்டு விகாரைக்கு சென்றிருந்த வேளையில் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அப்போது வீட்டில் குறித்த நபர் மட்டுமே இருந்துள்ளார்.
குறித்த வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் திறந்து கிடப்பதால் சந்தேகமடைந்த அயலவர், உயிரிழந்தவரின் மனைவிக்கு தகவல் கொடுத்துள்ளார். அப்போது அவரது முகம் மற்றும் கைகால்கள் கட்டப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எடுத்து செல்லப்பட்டதுடன், பொருட்களை கொள்ளையடிக்கும் நோக்கில் கொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
