கொழும்பில் மனைவியை இரண்டாக வெட்டி கால்வாயில் வீசிய கணவரும், மருமகனும் கைது!
தனது மனைவியை இரண்டாக வெட்டி கால்வாயில் வீசிய குற்றச்சாட்டில் கணவரும், உடந்தையாக இருந்த மருமகனும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் ஸ்டேஸ்புர பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
போதைப்பொருள் வர்த்தகம்
ஸ்டேஸ்புர தொடர்மாடி வீட்டுத் தொகுதியில் வசித்த 65 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் கணவர் உயிரிழந்துள்ள நிலையில் தன்னை விட வயது குறைவான ஒரு நபருடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இருவரும் இணைந்து போதைப்பொருள் வர்த்தகம் செய்து வந்துள்ளனர்.
கைது
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் 25 வயதான வாலிபர் ஒருவருக்கும் தவறான உறவு ஏற்பட்டள்ளது.
இதனையடுத்து கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்த அவரது இரண்டாவது கணவர், கத்தியால் குத்தி தன் மனைவியைக் கொலை செய்து இரண்டாக வெட்டி கழிவுநீர்க் கால்வாயில் வீசியெறிந்துள்ளார்.
குறித்த பெண்ணின் மகளின் கணவர் இந்தச் செயலுக்கு உடந்தையாக இருந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் குறித்த இருவரும் தற்போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யார் இருக்கிறார்கள் அங்கே... இந்தியாவில் 35 ஆண்டுகளாக வசிக்கும் பாகிஸ்தானிய பெண்மணி உருக்கம் News Lankasri

₹25 கோடி லாஸ் ஏஞ்சல்ஸ் சொகுசு பங்களா முதல் ₹3 கோடி மெர்சிடிஸ் கார் வரை! ஏ.ஆர். ரஹ்மானின் பிரம்மாண்டமான வாழ்க்கை News Lankasri
